சூடானில் பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 33 பயணிகள் பலி ,24 பேர் படுகாயம்
சூடானில் பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில், 33 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்தனர்.சூடானின் கார்டோம் பகுதிக்கும் வாட் மெடானி பகுதிக்கும் இடையில்
நேற்றிரவு மினி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி
செல்ல முயன்ற போது, எதிரில் வந்த மற்றொரு பெரிய பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 பஸ்களிலும் இருந்த பயணிகள் 33 பேர் பலியாயினர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.சூடானில் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. டிரைவர்களுக்கு போதிய பயிற்சி இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கார்டோம் பகுதியில் நடந்த விபத்தில் 21 பேர் இறந்தனர். கடந்த அக்டோபர் 13ம் தேதி வாட் மெடானி பகுதியில் மினி பஸ் விபத்தில் சிக்கியது. இதில் 13 பேர் பலியாயினர். 26 பேர் படுகாயம் அடைந்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக