நாட்டில் சுகாதார சேவையில் பணிபுரியும் மூன்று பெண்கள் மீது பாலியல் வல்லுறவு
சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களில் பணிபுரியும் மூன்று பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் குறித்த விசாரணை பொறுப்பு பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியருகிறது.
வைத்திய விநியோக பிரிவு மற்றும் தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் வைத்து குறித்த மூன்று பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட பெண்கள் சுகாதார அமைச்சரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதன் பின்னரே சுயாதீன விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக