புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொலம்பியாவில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் நேவியா நகர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. சேறும் சகதியுடன் பாறைகளும் சாலையில் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புல்டோசர்கள்
மூலம் மண்ணை அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது ஒரு புறம் வானங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் சென்ற வாகனங்களை அமுக்கியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர், 7 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் 7 கார்களில் சென்ற 20 பேர் மண் குவியலில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். ராட்சத எந்திரங்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணியில் 300 பேர் ஈடுபட்டுள்ளனர்.
 
Top