குவைத் நகரப்பகுதியில் மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டுவந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபர் குவைத் நாட்டின் குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர் தனக்கு பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கூடிய சக்தி உள்ளது எனக் கூறி மாந்திரீக வெலைகளில் ஈடுபட்டுள்ளார்.
இவர் இதற்கான கட்டணமாக 150 குவைத் டினார்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நபர் குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் பின்னராக புலனாய்வுப் பிரிவினர் அந்நபரை தொடர்ந்தும் அவதானித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் புலனாய்வுப் பிரிவினர் விரித்த சதி வலைக்கு இனங்க அந்நபர் ஒருவரிடமிருந்து தனது மாந்திரீக வேலைக்கான பணமாக 20 குவைத் டினாரை பெறும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.