புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பெண்கள் அனைவருக்குமே கர்ப்பமாக இருக்கும் போதே குழந்தைகளைப் பற்றி எதுவும் தெரியாது. அதுவும் புது அம்மாவாக இருந்தால், எதுவும் தெரிய வாய்ப்பில்லை. சொல்லப்போனால் கர்ப்பமாக இருப்பது என்பது ஒரு மிக சிறந்த அனுபவம். சந்தோசமான ஒரு காலம். நமக்கு பிறப்பது ஆணா
அல்லது பெண்ணா என்றெல்லாம் கற்பனை துள்ளும். எதுவாயினும், முக்கியமாக குழந்தைகளை எப்படி வளர்க்க போகிறோம் என்ற சிந்தனையில் கவலையும் இருக்கும். எனவே அந்த கவலையை தவிர்க்க இதைப் படித்துப் பாருங்கள்.

1 அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பில்லை. ஒரு சில குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கும், சில குழந்தைகள் அமைதியாக சிரித்துகொண்டு தொல்லை கொடுக்காமல் இருக்கும். அதற்காக நம் குழந்தையை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்று இணையதளத்தில் சிறிது நேரம் பார்க்கலாம். இல்லையெனில் குழந்தைகளைப் பராமரிப்பது மற்றும் வளர்பபதற்கான புத்தகங்களைப் படிக்கலாம். அதற்கு வேலையில்லாத நேரங்களில் அருகில் உள்ள நூலகத்திற்குச் சென்று, குழந்தைப் புத்தகங்களை படிக்கலாம். அவை உமக்கு துணை புரியும். எத்தனையோ புத்தகங்களில் குழந்தை நலனை பற்றிய வாசங்கள் இடம் பெற்றுள்ளன. அதிலும் இன்றைய காலத்திற்கு ஏற்ப அவை எழுதப்பட்டுள்ளன. இவைகள் மிகவும் மிகவும் உபயோகப்படும்.

2 அதுமட்டுமின்றி இப்பொழுதெல்லாம் குழந்தையை வளர்ப்பது பற்றி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. புது அம்மாவாக உள்ளவர்கள் மற்றும் குழந்தைகளை சமாளிக்க கடினம் என நினைப்பவர்கள், இத்தகைய இடத்திற்குச் சென்று அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

3 வேண்டுமெனில் நமது அம்மா அல்லது மாமியாரிடம் யோசனை கேட்கலாம். இல்லையேல் அவர்களையே நம்முடன் நம் குழந்தையை வளர்க்க துணையாக வைத்து கொள்ளலாம். இவை மிகவும் உதவியாக இருக்கும். முக்கியமாக நம்மை வளர்த்தவர்கள் அவர்தானே என்பதையும் மறந்துவிட கூடாது.

4. தோழிகள் அல்லது அக்கம் பக்கம் உள்ளவரிடம், குழந்தையை வளர்ப்பது, பாதுகாப்பது பற்றி பேசித் தெரிந்து கொள்ளலாம். இதனால் அவர்கள் குழந்தையை வளர்க்கும் போது, என்னென்ன கஷ்டங்கள் வந்தது என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்வார்கள்.

5. எல்லாவற்றிற்கும் மேலாக நம் குழந்தைகளுடன் நாமிருக்கும் அனுபவம் தான் மிகுந்த துணையாக இருக்கும், அதுமட்டுமின்றி அந்த அனுபவம் சந்தோஷத்தை கொடுக்கும். அதை உணர ஆரம்பித்து விட்டால், நாமே பெரிய அனுபவசாளிகள். அது எப்படியெனில் குழந்தைகள் அழும் நேரத்தில் ஏதாவது சத்தத்தை எழுப்பி பார்க்க வேண்டும். அப்போதும் அழுகையை நிறுத்தாவிட்டால், பால் கொடுத்து பார்க்க வேண்டும், அதுவும் இல்லையா காற்றுக்காக அழுகிறதா இல்லை, ஏதாவது வலிக்கு அழுகிறதா, என்று நமது ஆராய்ச்சியின் மூலம் குழந்தையை எந்த ஒரு அனுபவமுமின்றி நன்கு பார்த்துக் கொள்ளலாம். குழந்தையை நம்மால் சரியாக பார்த்து கொள்ள முடியவில்லை என துன்பப்பட ஆரம்பித்தால், நம் உடல் நிலை பாதிக்கும், பின் அவர்களை பார்த்துக் கொள்ள முடியாது. அதனால் தேவையற்ற கவலை வேண்டாம்.

நமக்கு தண்ணி தாகம் எனில் குழந்தைக்கும் கொடுங்கள், வியர்ப்பது போல் தெரிந்தால், காற்று வரும் இடத்தில் உட்காருங்கள். இது போன்று அன்றாட நடக்கும் செயல்களுக்கு ஏற்றவாறு செயல்பட்டால், அதுவே சிறந்த அனுபவமாக இருக்கும். எனவே பயம் வேண்டாம். நாம் பெற்ற குழந்தையை நம்மால் சமாளிக்க முடியவில்லை என்றால் பின் யார் வந்து சமாளிப்பார். ஆகவே அவர்களுடன் சந்தோஷமாக, ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் செய்யும் சேட்டைகளை பார்த்து மகிழ்ந்து, சந்தோஷமாக குழந்தையை வளர்த்து வாருங்கள்.
 
Top