புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை 68 வயோதிபர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் நேற்று நடைபெற்றுள்ளது.
அயல் வீட்டைச் சேர்ந்த சிறுமி இரவு வேளை வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கையில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முகமது ஆதம்பாவா என்பவரே இச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வயோதிபராவார்.

குறித்த சிறுமி வாழைச்சேனை மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று பகல் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான வயோதிபர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top