பொலன்னறுவை பெரக்கும்புர விவசாய பிரதேச குளாய் கிணறு ஒன்றிலிருந்து எரிபொருளையொத்த திரவம் ஒன்று வெளிவந்து கொண்டிருப்பதாக பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 185 அடி ஆழம் கொண்டதாக 2011
ஆம் ஆண்டு குறித்த குளாய் கிணறு அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக இந்த கிணற்றிலிருந்து எரிபொருளையொத்த திரவம் ஒன்று வெளிவந்தவண்ணமுள்ளது.
இதனால் கடந்த சில நாட்களாக இந்த கிணற்று தண்ணீரை பயன்படுத்துவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.
இதேவேளை இச்செய்தியானது காட்டுத்தீ போல அப்பிரதேசம் எங்கும் பரவியதை அடுத்து இதனைப் பார்வையிடுவதற்கு பெருந்தொகையான மக்கள் வருகைதந்தவண்ணம் உள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக