யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்திய இளைஞன் சிறுமியுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு (30) சரணடைந்துள்ளதை அடுத்து அவ் இளைஞன் மீது கடத்தல் மற்றும்
பாலியல் வல்லுறுவு வழக்கு இன்று (31) வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காதல் விவகாரம் தொடர்பாக சிறுமியை கடத்தியதாகவும் அச்சிறுமியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையியாலேயே சிறுமியை கூட்டிச் சென்றதாக குறித்த இளைஞன் யாழ். பொலிஸ் நிலையத்தில் தனது வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் பெனடிக் வீதியைச் சேர்ந்த 21 வயதான சுரேஸ் என்பவரே இவ்வாறு பொலிஸில் சரணடைந்துள்ளார். இவர் மீதே பாலியல் மற்றும் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே அருள்நேசன் ஆருனியா (வயது - 15) என்ற சிறுமியை கடந்த செவ்வாய்க்கிழமை மாலை செம்மணி பகுதியில் வைத்து கடத்தியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையிலேயே குறித்த சிறுமியுடன் பொலிஸில் இளைஞன் சரணடைந்துள்ளார்.
குறித்த இளைஞன் சிறுமியுடன் காதல் தொடர்பு கொண்டிருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது.
இந்நிலையில் சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக உட்படுத்தி வருவதாகவும் யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக