விடுமுறையை கொண்டாடவென இலங்கைக்கு வந்திருந்த ஜேர்மன் நாட்டு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த இளைஞர்
கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் - இரனவில பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் கடற்கரையில் தான் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இளைஞன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக ஜேர்மன் - பேர்லின் நகரைச் சேர்ந்த பெண் ரவோனா ஹெலன் ஹுட் ஹெம்ரி (25 வயது) சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இதன்படி சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மெதிரிகிரிய பகுதி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சிலாபம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக