புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில் குழந்தையை கூண்டில் அடைத்து விட்டு சினிமாவுக்கு சென்ற காதல் ஜோடியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பகுதியை சேர்ந்தவர்கள் சின்டி(வயது 33), இவரது காதலர் எட்மண்ட்(வயது 37).

இவர்கள் சமீபத்தில் மூன்று குழந்தைகளுடன் சினிமா பார்க்க சென்றனர். இந்நிலையில் இவர்களது 8 வயது வளர்ப்பு மகனை வீட்டில் அடைத்து வைத்துள்ளதாக பொலிசாருக்கு புகார் வந்தது.

இதனையடுத்து சின்டியின் வீட்டுக்கு வந்து பொலிசார் சோதனை நடத்தியதில், 8 வயது மகன் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து சின்டியையும், எட்மண்டையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top