சுவீடனில் சகோதரியை 107 முறை கத்தியால் குத்தி கௌரவ கொலை செய்த சகோதரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவீடன் நாட்டின் லேண்டுஸ்குரோனா பகுதியை
சேர்ந்தவர் சேவியர்(வயது 17). இவர் தன்னுடைய சகோதரி லாரா(வயது 19) என்பவரை 107 முறை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதன் பின் பொலிசுக்கு தகவல் கொடுத்த சேவியர், முகமுடி அணிந்து வந்த மர்ம நபர் லாராவை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், தன் குடும்பத்திற்காக லாராவை கௌரவ கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தன்விருப்பத்திற்கு மாறாக வயதான நபரை திருமணம் செய்து வைத்த காரணத்தினால் லாரா தப்பிஓடி வந்துவிட்டார் என்பதும், இதனாலேயே லாராவை சேவியர் கொலை செய்ததும் தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சேவியருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக