புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவச் சிறுமி  ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலையின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல
பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 9 வயது பாடசாலை மாணவியே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொஹமட் ஜெப்ரி தெரிவித்துள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்காக யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுமார் 60 வயதான பாடசாலையின் காவலாளியே மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top