ராஜஸ்தான் மாநிலம் டான்க் பகுதியில் ஒரு பெண், தனது 11 வயது மகளை 6 லட்சத்துக்கு ஒரு விபச்சார கும்பலிடம் விற்றது பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. காவலர்கள் துணையுடம் அந்தச் சிறுமி தப்பினார். இதனால் இந்தத் தகவல் வெளியே தெரியவந்துள்ளது.
அந்தப் பெண், தனது மகளை ரூ.6 லட்சத்துக்கு விற்ற ஒப்பந்தப் பத்திரத்தை பொலிஸார் கைப்பற்றினர்.
இது குறித்து துணை காவல் ஆய்வாளர் ராகேஷ் வர்மா கூறிய போது, “நாங்கள் அந்தச் சிறுமியிடம் இருந்து அந்தப் பத்திரங்களை கைப்பற்றினோம்.
அதில் மிகத் தெளிவாக, அந்தச் சிறுமியை கஞ்சார் பஸ்தியைச் சேர்ந்த சண்ட்ரா மற்றும் தாரா சந்த் ஆகியோருக்கு ரூ.6.5 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார் அவரது தாய். இந்த ஒப்பந்தத்தில் டிச.16 அன்று ரூ.2 லட்சம் உடனே தரப்பட் டுள்ளது.
அடுத்த இரு மாதங்களில் ரூ.4 லட்சம் தரப்படும் என்று கூறப்பட்டிருந்தது’’ என்றார்.
தற்போது அந்தச் சிறுமி, மகளிர் காப்பகமான நாரி நிகேதன் ஷெல்டருக்கு அனுப்பப் பட்டுள்ளார். சிறுமியை விற்ற தாய் ராஜ்ராணி, வாங்கிய தம்பதி, இடைத் தரகராகச் செயல்பட்டவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விதவையான ராஜ்ராணியோ, தனது சமுதாயப் பஞ்சாயத்தால் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அதற்காக மகளை அடமானம் வைத்து ரூ.2 லட்சம் பணத்தைப் பெற்றதாகவும், இதை மீண்டும் கொடுத்து மகளை மீட்க இருப்பதாகவும்
0 கருத்து:
கருத்துரையிடுக