சகோதரியின் இரண்டு வயது பெண் குழந்தையை வாலிபர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கறி சமைத்த கொடூர சம்பவம் ரஷ்யாவில் நடந்தேறியுள்ளது.
ரஷ்யாவின் ஓல்டோன்டோ போர்சின்ஸ்கி மாவட்டத்தில் உள்ள சிட்டா கிராமத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த கொடூர சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சி அடைய செய்தது.
இக்கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிரி கேட்சீவ் என்ற 34 வயது வாலிபர் தனது சகோதரியின் வீட்டில் வசித்து வந்தார். அவரது சகோதரி எலினாவுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அவரது சகோதரி குழந்தைக்கு உடை எடுப்பதற்காக வெளியே சென்றார்.
நீண்ட நேரத்திற்கு பின்பு வீட்டுக்கு திரும்பிய அவரது சகோதரி, வீட்டில் குழந்தையை காணாமல் வீடு முழுவதும் தேடினார்.
அப்போது சமையல் அறையில் வாணலியில் துண்டு துண்டாக குழந்தையின் உடற்பகுதிகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குழந்தையின் தாய் வெளியே சென்ற நேரத்தில் வீட்டிலிருந்த நபர், குழந்தையை வெட்டி, கறி சமைக்க முயன்றது தெரிந்தது.
இதை அடுத்து அவரை பொலிசார் கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக