திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் முருகப்பா காலனியை சேர்ந்தவர் ஹேமலதா (25). சென்னை அண்ணாநகரில் உள்ள ரத்த பரிசோதனை மையத்தில் பணியாற்றுகிறார். இவருக்கும்
அய்யப்பாக்கம் வீடுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் பிரவீன்குமாருக்கும் (33) 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்து.
இதன்பிறகு, கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்து வருகின்றனர். பிரவீன்குமார் அடிக்கடி ஹேமலதாவுடன் செல்போனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தையில் பேசியுள்ளார். ஆபாசமாக படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என மிரட்டி உள்ளார்.
இதனால், பிரவீன்குமார் போன் செய்தால், ஹேமலதா எடுப்பது கிடையாதாம். இந்த நிலையில், ஹேமலதா வீட்டுக்கு நேற்று பிரவீன்குமார் சென்றுள்ளார். ‘‘ஏன் போன் பேச மாட்டேன் என்கிறாய்‘‘ என்று தகராறு செய்துள்ளார்.
இது குறித்து திருமுல்லைவாயல் போலீசில் ஹேமலதா புகார் செய்தார். எஸ்ஐ வள்ளி வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக