புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாம்புப் பெண் என்று அழைக்கப்படுகின்ற கொள்ளுப்பிட்டி இரவு நேர கேளிக்கை விடுதியொன்றின் நடன மாதுவான நிரோஷா விமலரத்ன கடந்த வாரம் சவுதி பிரஜையான
சுல்தான் அப்துல் அல்சாரி என்பவரினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்நாள் அப்பெண் தனது முறைப்பாட்டை வாபஸ் பெற்றதுடன் அந்த நபருடன் சமாதானமாகப் போயுள்ளார்.

கொள்ளுப்பிட்டி கேளிக்கை விடுதியின் நடன மாதுவான நிரோஷா கடந்த ஒருமாத காலமாக சுல்தான் அப்துல் அல்சாரி என்பருடன் வெல்லம்பிட்டி பகுதியில் ஒன்றாக வசித்துள்ளார்.

குறித்த நபர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாகவும், அதனால் அவருடன் சோ்ந்து வாழ்ந்து வந்ததாகவும் அப்பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இவ்வாறு வாழ்ந்து வந்த நிலையிலேயே கடந்த 23ம் திகதி அதிகாலை 4.20 மணியளவில் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் நிரோஷாவை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்தனர். அத்துடன் அப்பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

குறித்த பாம்புப் பெண்ணின் தாக்குதலை அடுத்து சந்தேகநபரான சுல்தான் தலைமறைவாகியிருந்தார்.

அச் சந்தேகநபரை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வந்த நிலையிலேயே நேற்று முன்நாள் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற பாம்புப் பெண் தனது முறைப்பாட்டை வாபஸ் பெற்றுள்ளார்.

பாம்புப் பெண் தனது முறைப்பாட்டை வாபஸ் பெற்றிருந்த போது சந்தேகநபரான சவுதி பிரஜையும் அங்கு வந்திருந்ததுடன் இருவரும் சமாதானமாகச் சென்றதாகத் தெரிவித்தனர்.

டிலானி என்று அழைக்கப்படுகின்ற பாம்புப் பெண் நிரோஷா விமலரத்ன கொள்ளுப்பிட்டி கிளியோபற்றா கேளிக்கை விடுதியில் பாம்புடன் நடனமாடிய போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அப்பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் அவரிடமிருந்த நாகபாம்பு நீதிமன்றின் உத்தரவின்படி தெஹிவளை தேசிய மிருகக்காட்சிச் சாலையில் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பின்னர் அந்த நாகபாம்பை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்குமாறு அப் பெண் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட நீதிமன்றம் நிபந்தனைகளின் அடிப்படையில் நாகபாம்பை அப்பெண்ணிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது.

அதனையடுத்து மிருகக்காட்சிச் சாலையிலிருந்து தனது பாம்பை அப்பெண் பெற்றுக்கொண்டார்.

இந்தப் பாம்பு விடயத்தால் பிரபல்யமடைந்த பாம்புப் பெண் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து அவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்துள்ளது.

அத்துடன் பின்னர் அந்த முறைப்பாட்டை அவர் வாபஸ் பெற்றுள்ளார்.

எனவே அவர் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கலாம் எனவும் வைத்தியர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top