புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மார்த்தாண்டம் அருகேயுள்ள கண்ணன்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி இந்திரா (37). காதலித்து திருமணம் செய்தனர். கணவனை பிரிந்த இந்திரா ஆற்றங்கரை பகுதியில்
உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை ஒரு வாலிபர் இவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார்.

இந்திரா கணவனை பிரிந்த பின் மற்றொருவருடன் வாழ்ந்துள்ளார். அப்போது நெல்லையை சேர்ந்த பிரபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது நபரை விட்டுவிட்டு பிரபுவுடன் சென்றார். இதை தட்டி கேட்ட இரண்டாவது நபரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பிரபு வெட்டி கொலை செய்தார். இதனால் பிரபுவை போலீசார் கைது செய்தனர்.

அவர் சிறைக்கு சென்றபின் அவரது நண்பர் திருச்செந்தூரை சேர்ந்த ஆனந்த் என்பவருடன் இந்திராவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வாழ்க்கையும் வெறுத்துபோனதால் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திரா தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின் ஆனந்த் அவ்வப்போது இங்கு வந்து சென்றுள்ளார். சமீபகாலமாக இந்திரா ஆனந்தை வெறுக்க ஆரம்பித்துள்ளார். வீட்டுக்கு வரவேண்டாம் என ஆனந்திடம் கூறியுள்ளார். வழக்கம்போல் நேற்று காலை ஆனந்த் வந்தார். இந்திரா அவரை, வீட்டைவிட்டு வெளியே செல்ல கூறியுள்ளார். ஆத்திரமடைந்த ஆனந்த் தான் வைத்திருந்த அரிவாளால் இந்திராவை சரமாரியாக வெட்டிவிட்டு பைக்கில் தப்பி சென்றுவிட்டார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் ஆனந்தை தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top