புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடிபோதைக்கு அடிமையான தந்தை ஒருவன் தமது 5 மாத பச்சிளம் பெண் குழந்தையின் காது, கன்னம், உதடு போன்ற பகுதிகளை கடித்து குதறி எடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பகதூர் சிங் என்பவன் குடிபோதைக்கு அடிமையானவன். சில நாட்களுக்கு முன்பு உச்சகட்ட போதையில் வீட்டுக்கு வந்த அவன் மனைவியுடன் வழக்கம்போல சண்டை போட்டுள்ளான்.

அப்போது மனைவி மற்றும் 3 வயது பெண் குழந்தையை அடித்து காயப்படுத்தியிருக்கிறான். அத்துடன் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த 5 மாத பச்சிளம் பெண்குழந்தையைத் தூக்கி அதன் கன்னம், உதடு, காது என பல இடங்களை கடித்துக் குதறி சதைத் துண்டங்களை எடுத்திருக்கிறான்.

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடிகார தந்தையை பொலிசார் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top