வீட்டில் அறைக்குள் வந்து காதலியுடன் இன்பம் அனுபவித்த வாலிபன் கையடக்கத் தொலைபேசியில் இருந்து எழுந்த ஒலி காரணமாக கட்டிலுக்கு அடியில் இருந்துபிடிக்கப்பட்ட சம்பவம் கலகெதரவில் கடந்த
நாட்களில் இடம்பெற்று உள்ளது.
ஒரு குடும்பம். தகப்பன் கொழும்பில் வேலை பார்த்து வருபவர். வார இறுதியில் மாத்திரம் வீட்டுக்கு வருவார். தாய், மகள், கடைக்குட்டி மகன் ஆகியோர் இவ்வீட்டில் உள்ளார்கள். கடந்த மாதம் வரை தாயுடன் ஒரே அறையில் படுத்து வந்திருக்கின்றார் மகள். மகன் இன்னொரு அறையில்.
இடையூறு இன்றி படிக்க வேண்டி இருக்கின்றது என்று சொல்லி கடந்த மாதத்தில் இருந்து தனி அறைக்கு மகள் சென்று விட்டார். நள்ளிரவு வரை மகளின் தனி அறையில் மின்குமிழ் ஒளிர்வதை தாய் அவதானித்து இருக்கின்றார்.
மகளுக்கு மிக அபூர்வமாகத்தான் தொலைபேசி அழைப்புக்கள் வரும். கடந்த 22 ஆம் திகதி மகளின் அறைக்குள் இருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்றின் சத்தம் அசாதாரண முறையில் ஒலித்தது.
இவ்வழக்கத்துக்கு மாறான ஒலியை செவிமடுத்தார் கடைக் குட்டி. தாயையும் அழைத்துக் கொண்டு சகோதரியின் அறையை திறப்பித்து உள்ளே வந்தார்.
இச்சத்தம் தொடர்பாக கேட்டபோது எதுவுமே நடக்கவில்லை என்பது போல சமாளித்தார் மகள். தாயும், மகனும் அறையை நோட்டமிட்டனர். கண்களில் எதுவும் படவில்லை. வெளியேறினர். ஆனால் அப்போது மீண்டும் அதே சத்தம் ஒலித்தது. திரும்பி வந்தனர். அக்காவின் கட்டிலுக்கு கீழே முழுநிர்வாணமாக கிடந்த வாலிபனை கையும் மெய்யுமாக பிடித்தார்.
வெளிவாரிப் பட்டப் படிப்பு வகுப்புக்கு சென்று வந்த மகளுக்கு இவ்விளைஞனுடன் காதல் ஏற்பட்டது.
இப்பழக்கம் படுக்கை அறை வரை நெருக்கம் ஆனது. திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற ஜன்னல் வழியே உள்ளெ வந்து இளைஞன் இன்பம் அனுபவித்து செல்கின்றமை வழக்கமாக இருந்தது.
ஆனால் சம்பவ தினம் இளைஞனின் கையடக்கத் தொலைபேசிக்கு வந்திருந்த இரு அழைப்புக்கள் இத்தொடர்பைக் காட்டிக் கொடுத்து விட்டன. முதலாவது ஒலி கேட்டு தாயும், மகனும் வந்தபோது இவர் உஷாராகி கட்டிலுக்கு அடியில் ஒளித்து இருந்து இருக்கின்றார், ஆயினும் இரண்டாவது ஒலியில் அகப்பட்டு கொண்டார்.
பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இளைஞன் பிடித்துச் செல்லப்பட்டு உள்ளார். அத்துடன் சம்பந்தப்பட்ட யுவதி கடுமையாக எச்சரிக்கப்பட்டு உள்ளார். வாலிபன் ஏற்கனவெ திருமணம் ஆனவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. ஆயினும் இவர் திருமணம் ஆனவர் என்பது யுவதிக்கு தெரியாது.
0 கருத்து:
கருத்துரையிடுக