அண்ணனை 12 வயதான தம்பியே சுட்டுக்கொண்ட சம்பவம் கனடாவின் மாண்டரியல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் மாண்ட்ரியலின் புறநகர்ப்பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தில் மாலைவேளையில் திடீரென்று தனது 16 வயது அண்ணனை, 12 வயதான தம்பி துப்பாக்கியால் சுட்டுகொன்றான்.
பொலிசார் துப்பாக்கிசூடு நடந்த வீட்டுக்கு விரைந்து சென்று அச்சிறுவனை கைது செய்து அவனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.
பின்பு அச்சிறுவனை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அவனது பெற்றோர்களும் அந்த அறையில் இருந்தனா். அவனைப் பற்றிய தகவல்களை பொலிசார் பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கவில்லை.
அந்த சிறுவன் குறித்து அண்டை வீட்டார் கூறுகையில், இந்தச் சிறுவா்கள் மென்மையானவர்கள், அன்போடு பழகுவார்கள், உதவி செய்யும் மனப்பான்மை நிறைந்தவர்கள் என்று கூறினர்.
மிக அழகான இந்த குடும்பத்தில் துப்பாக்கி இருந்திருக்கும் என்று யாருமே நினைத்துப்பார்க்க முடியவில்லை என்று வருத்தப்பட்டனர்.