தனது மனைவியை மதமாற்றிய மதகுரு ஒருவரை கொலைச்செய்த கணவனரான வர்த்தகருக்கு கிழக்கு மாகாண மேல் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்து இன்று
செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
கிறிஸ்தவ மதத்திற்கு தனது மனைவியை மதமாற்றிய பாதிரியார் ஒருவரையே குறித்த சந்தேகநபர் கொலைச்செய்ததுடன். அவருடைய மனைவிக்கும் கடுங்காயங்களை ஏற்படுத்தியிருந்தார். என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
குறித்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய நீதிபதி ரோஹன அனுரகுமார ஹேரத் கொலை வழக்கின் சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்டு அவருக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார்.
அத்துடன் கொலை முயற்சிகள் தொடர்பிலான குற்றத்திற்கு அவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 5000 ஆயிரம் தண்டப்பணத்தை செலுத்துமாறும் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேற்படி வழக்கில் குற்றவாளியாக இனங்கண்ட வசந்த புத்திக்க துஷார நாயக்க என்பவருக்கே மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி அம்பாறையிலுள்ள மதகுருவின் வீட்டில் வைத்து மதகுருவை கொலைச்செய்ததுடன் அவரது மனைவியை கொலை செய்வதற்கு முயன்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.