கோழிக்கோட்டில் 9ம் வகுப்பு மாணவி காரில் கடத்தி கற்பழிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
கோழிக்கோடு புதிய பாலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சிறுமி ஒருவர் 9ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பள்ளி முடிந்ததும் அவரது பெற்றோர் வந்து அவரை அழைத்துச் செல்வது வழக்கும். கடந்த 17ம் தேதி மாணவியை அழைத்துச் செல்ல அவரது பெற்றோர் பள்ளி வாசலின் முன்பு காத்திருந்தனர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவி வரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் பள்ளிக்குள் சென்று தேடிப் பார்த்தனர். ஆனால் மாணவி வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தங்கள் மகள் மாயமானது குறித்து அவர்கள் கோழிக்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீஸ் கமிஷனர் பாஜன் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாணவியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதற்கிடையே அன்று இரவு 9 மணி அளவில் மாணவியின் வீடு அருகே ஒரு இன்னோவா கார் வந்து நின்றது. காரில் இருந்து ஒரு கும்பல் அந்த மாணவியை ரோட்டில் தள்ளிவிட்டது.
அவர் கீழே விழுந்ததும் மின்னல் வேகத்தில் அந்த கார் அங்கிருந்து சென்றுவிட்டது. போலீசார் மாணவியை மீட்டு விசாரித்தனர். அப்போது அவரை அவரது காதலன் மிதுன் உள்பட 4 பேர் காரில் கடத்திச் சென்று கற்பழித்தது தெரிய வந்தது. அவரின் வாக்குமூலத்தின் பேரில் போலீசார் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர். காதலன் மிதுனை உடனடியாக கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்பேரில் மாந்தோட்டத்தைச் சேர்ந்த நிசாம், நான்னாலம் பகுதியைச் சேர்ந்த அலி அக்பர், செம்மாங்காட்டைச் சேர்ந்த யூசுப் சுலைமான் ஆகியோரை கைது செய்தனர். கைதான 4 பேர் மீதும் கடத்தல், கற்பழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.