வட்டிக்கு கொடுக்கும் முதலாளி ஒருவர் கொலைச்செய்யப்பட்ட சம்பவம் ஒன்று வெல்லவ எத்திலியாகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இரண்டு இலட்சம் ரூபாவை வட்டிக்கு வாங்கிய ஒருவரே அந்த பணத்தை மீளக்கொடுக்காமல் அவரை கொலைச்செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு குழந்தையின் தந்தையே இவ்வாறு கொலைச்செய்யப்பட்டுள்ளார். குருநாகல் யன்னம்பலாவையைச்சேர்ந்த முதலாளியே இவ்வாறு கொலைச்செய்யப்பட்டுள்ளார்.
முதலாளி கடந்த நவம்பர் 11 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.