புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


போலி கடவுச்சீட்டின் மூலம் சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்களாக அனுப்பவென கிண்ணியாவிலிருந்து கொழும்புக்கு அழைத்து வந்த 17 வயதான இரு சிறுமிகளை மருதானை பொலிஸார் நேற்று முன்தினம் கைது
செய்துள்ளனர்.
இந்த இரண்டு சிறுமியரையும் தற்காலிகமாக தங்கும் விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்ற நபரையும் கிண்ணியாவிலிருந்து யுவதிகளை அழைத்து வந்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரவு பஸ் ஒன்றில் கொழும்புக்கு அழைத்து வந்த இந்த சிறுமிகளை நள்ளிரவு 1:00 மணியளவில் தரகர் ஒருவர் மோட்டார் சைக்கிளிலில் மருதானையில் உள்ள  தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நள்ளிரவு நேரத்தில் இரண்டு சிறுமிகளுடன் நபர் ஒருவர் மோட்டார் சைக்களில் செல்வதைக் கண்டு சந்தேகமுற்று ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேக நபர் தமது இரு புதல்விகளையும் கொழும்பிலுள்ள பாடசாலையில் சேர்ப்பதற்காக அழைத்து வந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் சிறுமிகள் இருவரும் உண்மையான விபரங்களை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த இரு சிறுமிகளையும் மருதானை விடுதியில் தங்க வைத்து போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை இந்தத் தரகர் மேற்கொண்டிருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
Top