ஒரே நாளில் 8710 பேரை கட்டி அணைத்து புதிய கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த மாணவரான, டேவிட் பார்சன்ஸ் ஈடுபட்டுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது நெருங்கிய தோழியை புற்றுநோய்க்கு பறிகொடுத்தவர், இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் பல்லாயிரக்கனக்கான குழந்தைகளுக்கு உதவ நினைத்தார்.
இதனால் டேவிட், இந்த கின்னஸ் சாதனையின் மூலம் நிதி திரட்டி புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்க தீர்மானித்துள்ளார்.
இதற்கு முன் 24 மணி நேரத்தில் 8709 பேரை அணைத்து ஜோனத்தன் செய்த சாதனையை முறியடிக்க வேண்டுமென்றால் டேவிட் 8710 பேருக்கு கட்டிபிடி வைத்தியம் செய்யவேண்டும்.