புத்தளம் பகுதியில் பட்டாசு வெடித்து மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.கடந்த 25ம் திகதி முக்குக்குவாவ வெவ பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி வீட்டு முற்றத்தில் கிடந்த பட்டாசு ஒன்றை எடுத்து சிறுமி கடித்துள்ளார். அதன்போது அப்பட்டாசு வெடித்ததில் படுகாயம் அடைந்த சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.