அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் மூன்று தமிழ்ப் பெண்கள் மீது காமவெறி பிடித்த காடையர் கூட்டமொன்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திருக்கோவில் மகாசக்தி கிராமத்தைச் சேர்ந்த இந்த மூன்று பெண்களும் வட்டமடு பிரதேசத்தில் வயல் வேலைகளில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த நான்கு காடையர்கள் அவர்களைப் பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்.
இதன்போது அந்தக் காமுகக் கயவர்களுடன் போராடிக் கொண்டிருந்த அந்த மூன்று பெண்களும் கூக்குரலிடவே பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்ததனைக் கண்ணுற்ற நான்கு காமுகர்களும் தலைமறைவாகி விட்டனர்.
இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்ட மூன்று பெண்களும் தப்பியோடி நகருக்குள் வந்துள்ளனர்.
இருப்பினும் கயவர்களுடன் அவர்கள் போராடியதால் காயமுற்ற நிலையில் முதலில் திருக்கோவில் வைத்தியசாலையில் மூவரும் அனுமதிக்கப்பட்டு பின்னர் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இந்தச் சம்பவம் இப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.