டெல்லி அருகே தத்ரி என்ற இடத்தில் மாற்றுத் திறனாளியான தனது 16 வயது மகளை பெற்ற தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. இதையடுத்து
அந்தத் தந்தை தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
தத்ரி பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாற்றுத் திறனாளிப் பெண்ணின் தந்தை, சமீபத்தில், தனது மனைவி அலிகாருக்குப் போயிருந்ததைப் பயன்படுத்தி வீட்டில் இருந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
முதலில் மயக்க மருந்து கொடுத்து விட்டு பின்னர் மகளை சீரழித்துள்ளார் இந்தத் தந்தை. இதுகுறித்து மயக்கம் தெளிந்ததும் அறிந்த மகள் கதறித் துடித்தார். பின்னர் தனது தாயார் வந்ததும் நடந்ததைக் கூறியுள்ளார். பதறிப் போன தாயார், தனது கணவர் மீது தத்ரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரைப் பதிவு செய்தனர் போலீஸார். இதையடுத்து அந்த நபர் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்