வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இம்முறை க.பொ.த. சாதாரணதர பரீட்சை எழுதிய பிரபாகரன் சஜீபன் (வயது16) என்ற மாணவனே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு குறித்த மாணவன் தனது வீட்டுக்கு அண்மையில் உள்ள கரையானகுளத்தில் குளத்தில் தனது நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த வேளையிலே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரண விசாரணைகளின் பின்னர் மாணவனின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.