கமலும் ஸ்ருதியும் புதுப்படம் மொன்றில் இணைந்து நடிக்கின்றனர். ஏற்கனவே ஸ்ருதி ’7ஆம் அறிவு’ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து பிரபலமானார். தனுஷ் ஜோடியாக ’3′ படத்தில் நடித்தார். தற்போது ‘பலுடி’, ‘ஏவடு’ என்ற இரு தெலுங்கு படங்களிலும்
இரண்டு இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்து தந்தை கமல் படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த தகவலை கமல் ஐதராபாத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார் அவர் கூறியதாவது:- எனது மகள் ஸ்ருதியும் நானும் புதுப் பட மொன்றில் இணைந்து நடிக்கப் போகிறோம். அதற்கான கதை தயாராக உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாகும். ஸ்ருதி தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமாகிவிட்டார். ஆனால் இந்தியில் பெயர் வாங்க வில்லை. அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்ததும் இந்த படத்தை எடுப்போம். இவ்வாறு கமல் கூறினார்.