புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அம்பாறையில்  திருக்கோவிலில் உள்ள வட்டமடு வயல் பிரதேசத்தில் களை பிடுங்கச் சென்ற பெண்கள் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு முயற்சி நேற்று காலை இடம்பெற்று உள்ளது.



மூன்று பெண்களை நான்கு பேர் கொண்ட குழு ஒன்று கற்பழிக்க முயன்றது. ஆயினும் இப்பெண்கள் காயங்களுடன் தப்பிக் கொண்டார்கள்.

பெண்கள் பலமாக கூச்சலிட்டமையைத் தொடர்ந்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஆண்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

கற்பழிப்பு முயற்சிக் கும்பல் மீது தாக்குதல் நடத்தினர். இதை அடுத்து கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடி விட்டார்கள்.

பெண்கள் திருக்கோவில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டு உள்ளது.
 
Top