கனடா வாழ் இந்தியப் பெண் ஒருவர் பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.கொலை குறித்து ஆராய கனடிய போலீஸாரின் குழு ஒன்று பாகிஸ்தானுக்கு
செல்கின்றது.
கனடாவில் வாழும் ரவீந்தர் கில் என்ற பெண், தன்னுடைய தொழில்துறை பயணமாக பாகிஸ்தானுக்கு மூன்று வாரங்களுக்கு முன் சென்றார்.பின்னர் அவரிடமிருந்து எவ்வித தகவல்களும் குடும்பத்தினருக்கு வரவில்லை.
ரவிந்தர் கில்லின் தந்தை, தன்னுடைய வழக்கறிஞர் Aftab Bajwa மூலம் பாகிஸ்தானின் உயர் காவல்துறை அதிகாரியிடம் தன்னுடைய மகள் கடந்த இரண்டு வாரமாக எவ்வித தொடர்பும் இல்லாமல் இருப்பதாகவும், அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறும் புகார் அளித்திருந்தார்.
பாகிஸ்தான் காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை செய்ததில், பாகிஸ்தானில் வாழும் ஜெர்மன் நாட்டவரைச் சேர்ந்த இருவர் பணத்திற்காக இந்திய பெண் ஒருவரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கொலையான பெண்தான், தேடப்பட்டு வரும் கனடிய இந்திய பெண் என்பதை பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த தகவலால், ரவீந்தர கில்லின் தந்தை கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். கொலை செய்த ஜெர்மன் நாட்டவரின் ஒருவர் பிடிபட்டுள்ளார்.
இன்னொருவரை தேடும் பணியில் பாகிஸ்தான் போலீஸார் உள்ளனர்.