புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜப்பானில் தன்னை ஒரு பாம்பு ஆட்கொண்டதாகக் கூறி ஆட்டம் போட்ட வாலிபரை அவரது தந்தை கடித்துக் கொன்றார்.

ஜப்பானில் உள்ள ஒகாசாகி நகரைச் சேர்ந்தவர் கட்சுமி நகாயா. அவரது மகன் டகுயா நகாயா(23). ஆஞ்சோ நகரில் வசித்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் தான் ஒரு பாம்பு என்று கூறி பாம்பு போல் ஆடியதுடன் வெறிப்பிடித்தது போன்று நடந்து கொண்டார். இதைப் பார்த்து அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து தனது மகனை ஆட்கொண்ட பாம்பை விரட்ட கட்சுமி டகுயாவை அடித்தும், கடித்தும் உள்ளார். இந்த கூத்து காலையில் இருந்து மாலை வரை நடந்துள்ளது.

தந்தை அடித்து, கடித்து, தலையால் முட்டியதில் படுகாயம் அடைந்த டகுயாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் விசாரணைக்கு முன்பு கட்சுமியின் மனநிலை குறித்து மருத்துவப் பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
 
Top