வகுப்பறையில் ஆசிரியையுடன் தலைமையாசிரியர் உல்லாசமாக இருந்த சம்பவம் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரை டிஸ்மிஸ் செய்யக்கோரி
மாணவர்கள் மறியல் செய்தனர். கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட்டில் அரசு நடுநிலைபள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்களுடன் நேற்று காலை பள்ளி முன்பு வால்பாறை , முடீஸ் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். வால்பாறை போலீசார் பேச்சு நடத்தினர்.
அவர்களிடம் மாணவர்கள், பெற்றோர்கள் கூறியதாவது: இப்பள்ளி தலைமையாசிரியர் உதயன், மற்றொரு பள்ளி ஆசிரியையும் வகுப்பறையில் உல்லாசமாக இருந்த காட்சிகள் இணையதளத்தில் வெளியானது. செல்போன், சிடிக்களிலும் வலம் வருகிறது. கவுரவம் மிக்க ஆசிரியர் பணியில் உள்ளவர்கள் கேவலமாக நடந்து கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இப்பள்ளியில் இளம்பெண்கள் படிக்கிறார்கள். மோசமான நடத்தையுள்ள தலைமையாசிரியரின் கீழ் குழந்தைகள் படிப்பது ஆபத்தானது. தலைமையாசிரியர் பணியிலிருந்து நீக்க வேண்டும். அதை வலியுறுத்தி மறியல் செய்கிறோம்Õ என்றனர்.