புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இது சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு ஓர் வித்தியாசமான அனுபவம் தான். கடந்த வெள்ளிக்கிழமை Cavaillon, (Vaucluse)  இன் தபால் அலுவலகப் பொதிப்பிரிவில் சுங்கத்
திணைக்களத்தினர் ஒரு வழமையான சோதனையை நடாத்தினார்கள். அப்பொழுது பிரான்சின் கோர்ஸ் (Corse) தீவின் Ajaccio விலிருந்து வந்த ஒரு பொதியைச் சோதனையிட்ட பொழுது உள்ளே 1,5 மீற்றர் நீளமுள்ள ஒரு மலைப் பாம்பு (BOA - dumerili) கண்டெடுக்கப்பட்டது.

ஒரு பொலித்தீன் பையில் சுத்திப் பின்னர் ஒரு சட்டையினால் அதைச் சுற்றியபடி ஒரு சாதாரண பொதியில் இப் பாம்பு அனுப்பப்பட்டுள்ளது. Seine-Maritime இலுள்ள ஒருத்தருக்கு இந்த மூன்று கிலோ எடையுள்ள மலைப்பாம்பு அனுப்பப்பட்டிருந்தது. உடனடியாக அவசர உதவிகள் சேவையினரும் (Les sapeurs-pompiers) வனவிலங்குகளின் வேட்டைக்கான தேசிய நிறுவனத்தினரும் (Office national de la chasse et de la faune sauvage)அழைக்கப்பட்டனர்.

இம் மலைப்பாம்பு குளிரால் மயக்கமடைந்திந்தது கண்டு உடனடியாக வனவிலங்குகளின் வேட்டைக்கான தேசிய நிறுவனத்தினர் ஒரு விலங்கியல் மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். கோர்ஸிலிருந்து விமானத்தில் பொதி வந்தமையால் ஏற்பட்ட மயக்கமே காரணம் எனக் கண்டறிப்பட்டது. அதன் பின்னர் அங்குள்ள மிருகக் காட்சிச் சாலைக்கு  இம் மலைப்பாம்பு வழங்கப்பட்டது. இவ்வினப் பாம்புகள் பாதுகாக்கப்பட்ட அருகி வரும் இனமாகும். இதனால் இவ் விவகாரம் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
 
Top