குழந்தை பெறவென பலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாய் மூன்றாவது குழந்தையை ஈன்றெடுப்பதற்கு முன்னர்
கர்ப்பப்பை வெடித்து கருவில் இருந்த குழந்தையுடன் உயிரிழந்துள்ளார்.
குழந்தை பெறவென 37 வயது கர்ப்பிணித் தாய் நேற்று (21) மாலை பலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் கருவில் இருந்த குழந்தையின் தலை பெரிதாக காணப்பட்டதால் குழந்தையை பெற்றெடுப்பதில் தாய்க்கு சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் உபாயமார்க்கத்தை பயன்படுத்தி குழந்தையை வெளியில் எடுக்க வைத்தியர்கள் மேற்கொண்ட முயற்சி கைகூடவில்லை.
குழந்தையை வெளியில் எடுக்க வைத்தியர்கள் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் போராடியபோதும் அது பலனளிக்கவில்லை.
குழந்தை உயிரிழந்த பின் தாயின் கர்ப்பப்பை வெடித்து அதிக இரத்தம் வெளியேறியதால் அவரும் உயிரிழந்துள்ளார்.
இந்த பரிதாபச் சம்பவத்தால் தாயின் உறவினர்களும் அயலவர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதேவேளை, குழந்தையின் தலை பெரிது எனத் தெரிந்தும் அதனை சிசேரியன் மூலம் வெளியில் எடுக்காதது ஏன் என உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.