புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜயசேதுபதி நடித்துள்ள படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். இந்த படம் 50 நாட்கள் ஓடி வெற்றிபெற்றிருக்கிறது. முன்னணி ஹீரோக்கள்
நடித்த படங்கள் துண்டக்காணோம் துணியக்காணோம் என்று தியேட்டர்களை விட்டு ஓட்டம் பிடித்துக்கொண்டிருக்க, இன்னமும் நின்று பவுண்டரிகளை அடித்து சாதித்துக்கொண்டிருக்கிறது இந்த சின்ன பட்ஜெட் படம். இதனால் கோடம்பாக்கத்தில் இப்படத்தின் ஹீரோ, இயக்குனருக்கு மவுசு கூடியுள்ளது. மேலும், சில நாட்களுக்கு முன்பு படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், ஒரு விழாவை சென்னையில் நடத்தினர்.

அப்போது இயக்குனர் பார்த்திபன், அப்படம் குறித்து தனது கருத்தை பேசும்போது, இந்த படத்தில் ஒரு பெரிய ஓட்டை உள்ளது என்று தனது பேச்சை ஆரம்பித்தார். அவர் வழக்கம்போல் ஏதாச்சும் காமெடியாக சொல்வார் என்று அனைவருமே நினைத்திருக்க, நிஜமாலுமே இந்த கதையில் பெரிய ஓட்டை உள்ளது. லாஜிக் இல்லை என்றார். உதாரணத்துக்கு, இரண்டு நாளைக்கு பிறகு ஹீரோவுக்கு கல்யாணம், ஆனா எல்லாமே அவருக்கு மறந்து போயிடுது. இதனால் நண்பர்களுக்கு பெருங்குழப்பம். ஆனாலும் எப்படியாவது கல்யாணத்தை நடத்தி வச்சிடனும்னு முயற்சி பண்றாங்க. ஆனால் நேரடியாக இந்த விசயத்தை அவரது காதலியிடம் சொல்லியிருந்தால் இந்த குழப்பமே வந்திருக்காது. அவளும் அந்த டிராமாவில் பங்கேற்றிருப்பாள். இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று குறை கண்டு பிடித்தார். என்றாலும் இயக்குனர் தனது திறமையால் அழகாக கதையை ப்ளே பண்ணி ஜெயித்திருக்கிறார் என்று பூசி மொழுகினார். இதன்காரணமாக, அதன்பிறகு படத்தை பெரிதாக புகழ நினைத்தவர்கள்கூட பார்த்திபன் இப்படி துவச்சி காய போட்டு விட்டதால் சம்பிரதாயத்துக்காக பாராட்டி விட்டு அமர்ந்தனர்.

ஆனால், பார்த்திபனின் பேச்சுக்கு, பார்வையாளர் வரிசையில் இருந்த சிலர், இது நிஜத்தில் நடந்த கதை. இஷ்டத்துக்கு சொல்ல முடியாது என்பதால்தான் அவர் அப்படியே படமாக்கி விட்டார் என்று பார்த்திபனுக்கு எதிர்ப்பாக குரல் கொடுத்தார். அதன்காரணமாக, தான் பேசி முடித்ததும் விழாவில் இருந்து வெளியேறினார் அவர்
 
Top