விஜய் நடிக்கும் புதிய படம் ‘ஜில்லா’. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி இப்படத்தை தயாரிக்கிறார். இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய கேரக்டரில் வருகிறார். பூர்ணிமா பாக்யராஜ், தம்பி
ராமையா, பரோட்டா சூரி, மகத், ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை நேசன் இயக்குகிறார். நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசையமைக்கிறார்.
ஜில்லா பட பூஜை இன்று காலை தியாகராயநகரில் உள்ள ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலகத்தில் நடந்தது. இதில் விஜய் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘ஜில்லா’ படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே ஆர்.பி.சௌத்ரி தயாரித்த ‘பூவே உனக்காக’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘லவ்டுடே’, ‘திருப்பாச்சி’ போன்ற படங்களில் நடித்துள்ளேன். எல்லா படங்களும் ஹிட்டாயின. அந்த படங்களின் சாதனையை ‘ஜில்லா’ படம் முறியடிக்கும். காஜல் அகர்வால் நாயகியாக வருகிறார்.
இவ்வாறு விஜய் கூறினார்.
ஆர்.பி.சௌத்ரி பேசும்போது சூப்பர் குட் பிலிம்சின் 25 வது படமாக ‘ஜில்லா’ தயாராகிறது. ‘திருப்பாச்சி’ படத்துக்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைந்துள்ளோம் என்றார். நடிகர் ஜீவாவும் விழாவில் கலந்து கொண்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக