இசை நிகழ்ச்சி ஒன்றை காணச்சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த வேளை காதலியை பாழடைந்த இடத்திற்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தி கிணற்றில் தள்ளிய
காதலன் உள்ளிட்ட மூவரை கைது செய்ய மீரிகம பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மீரிகம பகுதியில் நேற்று (10) இரவு இடம்பெற்றதாகக் கூறப்படும் இசை நிகழ்ச்சிக்கு குறித்த பெண் தனது காதலனுடன் சென்றுள்ளார்.
இசை நிகழ்ச்சி முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை, இடையில் பாழடைந்த இடத்தில் வைத்து 25 வயதான குறித்த பெண் காதலனால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கிணற்றில் தள்ளிவிடப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் பெண்ணின் காதலனின் நண்பர்கள் இருவருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (11) அதிகாலை 6 மணியளவில் குறித்த யுவதி தனது உறவினருக்கு அழைப்பை ஏற்படுத்தி நடந்தவற்றை கூறியுள்ளார்.
அதன்பின் அங்கு சென்ற உறவினர்கள் யுவதியை மீட்டு கம்பஹா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மீரிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக