டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ராம்சிங் இன்று காலை 5 மணி அளவில் திகார் சிறையில் தற்கொலை
செய்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதியன்று ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்டார். பின்னர் டெல்லி, சிங்கப்பூர் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ராம்சிங் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 5 பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் இன்று காலை 5 மணி அளவில் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் இன்று காலை திகார் சிறையின் 3 ஆம் எண் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவரது சடலம் டெல்லியிலுள்ள தீன் தயால் உபத்யெய் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
திகார் சிறையில் குற்றவாளிகளை கண்காணிக்க பலத்த பாதுகாப்பு அளிக்கபட்டிருந்த போதும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ராம்சிங் இன்று காலை 5 மணி அளவில் திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக வெளியாகியுள்ள தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக