கொலிவுட்டில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வலை படத்தில் நடித்து வரும் அஜீத், பின்பு சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படமொன்றை நடிக்கவுள்ளார்.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் படத்திற்கான வசனம் எழுதும் வேலையில் ஜெயமோகன்
ஈடுபட்டிருந்தார்.
தற்போது பாதி படத்திற்கு வசனம் எழுதிவிட்ட நிலையில், இப்போது அவரை எழுத வேண்டாம் என்று தடுத்துவிட்டாராம் இயக்குனர் சிவா.
ஜெயமோகன் வசனம் எழுதிய கடல் , நீர்ப்பறவை படங்களைப் போலவே தனது படமும் படு தோல்வியடைந்து விடக்கூடாதே என்ற பயம்தான் இதற்கு காரணமாம்.
அதனால், இப்போது படத்திற்கான வசனத்தை தானே எழுதும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார் சிறுத்தை சிவா
ஆனால் இந்த விடயத்தை கேள்விப்பட்ட அஜீத், அதிர்ச்சியடைந்திருக்கிறார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்து வரும் வலை படப்பிடிப்பு முடிந்த கையோடு சிவா படத்தில நடிப்பதற்கு திகதி கொடுத்திருந்தாராம்.
ஆனால், இப்போது கடைசி நேரத்தில் மொத்த வசனத்தை இவர் எழுதிக்கொண்டிருப்பதால், இவர் எப்போது வசனத்தை எழுதி முடிப்பது, நான் எப்பொழுது நடிக்கத் தொடங்குவது. கொடுத்த மொத்த திகதியையும் காலி செய்துவிட்டு, மீண்டும் திகதி கேட்பார் போல என்று அஜீத் கோபத்தை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்து:
கருத்துரையிடுக