புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜப்பானின், புகுஷிமா நகரத்தில் சுனாமி ஏற்படுத்திய பேரழிவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.


மதியம் 2.46 நிமிடத்திற்கு, 9 ரிக்டார் அளவில் தோன்றிய ஆழிப் பேரலை 19,000 மக்களை பலி கொண்டு வடகிழக்குப் பகுதிகளையே நாசம் செய்ததை நினைவு கூறும் விதமாக டோக்கியோவிலும், வடகிழக்கு கடற்கரையை ஒட்டியுள்ள இடங்களிலும் பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெற்றன. இதுவே ஜப்பானின் சரித்திரத்தில் மிகப்பெரிய நில அதிர்வாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களின் இருப்பிடத்திற்கு திரும்பவில்லை. பேரழிவினால் சிதைந்த வடகிழக்குப் பகுதியில் இன்னமும் எந்த விதமான மறுசீரமைப்புகளும் தொடங்கவில்லை. மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய கேசென்னுமா துறைமுகப் பகுதிகள் பனிபடர்ந்து காணப்படுகின்றன.

புகுஷிமா அணுமின் நிலையம் அருகில் வசித்து வந்த 16 ஆயிரம் மக்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்புவது குறித்து தயக்கம் காட்டுகிறார்கள். ஆழிப்பேரலை தாக்கியதில் அங்குள்ள மூன்று அணு உலைகள் வெடித்து அணுக்கதிர்கள், சுற்றியுள்ள நிலத்திலும் நீரிலும் ஊடுருவியதுதான் அம்மக்களின் தயக்கத்திற்கு காரணம்.

புதிய அரசு அமைந்தபின் அணுஉலை விபத்து குறித்து ஏதேனும் பெரிய மாற்றங்கள் இருக்கலாம் என்று மக்கள் எதிர்பார்த்தபோதிலும் அதிக நிதி ஒதுக்கீடு தவிர பெரிய மாற்றங்கள் இல்லை என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top