ஜப்பானில் 2011 ஆண்து சுனாமியில் அடித்து செல்லப்பட்ட படகு ஒன்று தற்போது பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் நாட்டை சேர்ந்த நொரிக்கோ கொடாச் என்பவருக்கு சொந்தமான படகு மூன்று நபர்களோடு 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் அடித்து செல்லப்பட்டது. பின்னர் அந்த படகு எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதனிடையே நேற்று கொலம்பியாவில் பெண் ஒருவர் தற்செயலாக அந்த படகை பார்த்து, அதிலிருக்கும் பெயர் மற்றும் முத்திரையப் பார்த்து, இது சுனாமியில் அடித்து வரப்பட்ட படகு என்பதை கண்டறிந்தார். இதன் மூலம் இந்த படகின் உரிமையாளர்களை கண்டுபிடித்து தகவல் கொடுத்துள்ளார். ஆனாலும் இந்த படகு அதிகளவில் சேதம் அடைந்திருப்பதால், இதை மீண்டும் உபயோகப்படுத்த இயலாத நிலையில் உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக