புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மட்டக்களப்பு, காரைதீவு பிரதேசத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இடம்பெற்ற பஜனையில் இசைக்கருவியொன்றினை வாசித்துக் கொண்டிருந்தவர் திடீரென உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையில் காரைதீவு சாயி சமித்தியில் பஜனைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த பஜனையில் டொல்கி வாசித்துக்கொண்டிருந்த காரைதீவைச் சேர்ந்த சீவரெட்னம் (65வயது) என்பவர் திடீரென அவ்விடத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த நபர் கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top