இங்கிலாந்து நாட்டின் பாலியல் குற்றங்கள் தடுப்பு மற்றும் அடிமை முறை ஒழிப்புக்கான சமூக நீதி மையம் சமீபத்தில் ஒரு ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:-
இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திச்சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் சம்பவங்கள் இங்கிலாந்தில் பெருகி வருகிறது. கடத்தப்படும் இளம்பெண்களை ஒவ்வொரு பெரிய நகரங்களுக்கும் மாற்றி, மாற்றி அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சிலர் ஆதாயம் அடைந்து வருகின்றனர்.
இது இங்கிலாந்து நாட்டிற்கே அவமானத்தை தேடித் தரும் பிரச்சனையாக தலையெடுத்து வருவது வருந்தத்தக்கது. கடத்தப்பட்ட 16 வயது இளம்பெண் ஒருத்தியை ஒரே வாரத்தில் 90 வெவ்வேறு வாடிக்கையாளர்களுக்கு விருந்தாக்கியுள்ள கொடுமையும் எங்கள் ஆய்வின்போது தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சியால் மனநிலை பாதிக்கப்பட்ட அந்த பெண் இப்போது மெல்ல, மெல்ல தேறி வருகிறார்.
கடந்த ஆண்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் கடத்தப்பட்டு பாலியல் தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக