புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கோவில்பட்டி அருகே உள்ள ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது52). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி(45). இவர்களது மூத்த மகள் செல்லத்தாய்(24).


இவரை பக்கத்து ஊரான கே.வெங்கடேஸ்வரபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான கனகராஜ்(28) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். முருகனுக்கும், லட்சுமிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அதேபோல் கடந்த 4 நாட்களுக்கு முன்பும் தகராறு ஏற்பட்டது. இதனால் லட்சுமி, கணவர் முருகனிடம் கோபித்துக்கொண்டு கே.வெங்கடேசபுரத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார்.

நேற்று முருகன், மனைவி லட்சுமியை அழைத்து வருவதற்காக மகள் வீட்டிற்கு சென்றார். மனைவியை சமாதானப்படுத்தி தன்னுடன் வரும்படி கூறினார். லட்சுமியும் முருகனுடன் வர சம்மதித்தார். இதனையடுத்து மருமகன் கனகராஜ், மாமனார் மற்றும் மாமியார் ஆகிய 2 பேரையும் தனது லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஆசூரில் உள்ள அவரது வீடு நோக்கி சென்றனர்.

அப்போது செல்லும் வழியில் திடீரென கணவன்- மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆட்டோவில் வந்துகொண்டிருந்தபோதே, ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.

உடனே கனகராஜ் ஆட்டோவை நிறுத்தி இறங்கினார். ஆவேசம் அடைந்த கனகராஜ், மாமியாருடன் சேர்ந்து மாமனார் முருகனை கம்பால் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பின்னர் முருகனின் பிணத்தை ஆட்டோவில் ஏற்றி ஆசூரில் உள்ள அவரது வீட்டில் போட்டு விட்டு லட்சுமியும், மருமகன் கனகராஜூம் தலைமறைவானார்கள்.

இதுகுறித்து முருகனின் சகோதரி நாலாட்டின்புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து தலை மறைவான 2 பேரையும் தேடி வருகிறார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top