புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-குர்காவ்னில் 45 வயது நபர் ஒருவர் தனது மகளையே 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


குர்காவ்னில் உள்ள பாடசாலை ஒன்றில் பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவி ஒருவர் நேற்று தனது தலைமை ஆசிரியையிடம் இது குறித்து முறையிட்டுள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை அவரை கடந்த 3 ஆண்டுகளாக, தனது மனைவிக்கு (மாணவியின் தாய்க்கு) தெரியாமல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார்.

அந்த காமக் கொடூர தந்தை வியாபார விஷயமாக வெளியூர் செல்லும்போதெல்லாம் மனைவி மற்றும் 2 குழந்தைகளை விட்டுவிட்டு மூத்த மகளான மாணவியை மட்டும் அழைத்துச் சென்றுள்ளார்.

அவ்வாறு அவர் மாணவியை மத்திய பிரதேசம், ஹிரத்வார் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

நேற்று இரவு அவர் தனது மகளை துபாய்க்கு அழைத்துச் செல்லவிருந்தார். துபாய்க்கு அழைத்துச் சென்று தந்தை மீண்டும் பலாத்காரம் செய்வார் என்று பயந்த மாணவி இது குறித்து நேற்று தனது பள்ளி தலைமை ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.

அவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பொலிசார் அந்த நபர் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top