புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சக்தி டாக்கீஸ் ஏ.ராஜசேகர் ரெட்டி தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஹ்ருஷிகேஷ அச்சுதன் சங்கர் இயக்கும் படம் கோப்பெருந்தேவி. நடிகை திரிஷா இந்த படத்தில்தான் ஹீரோயினாக நடிக்கிறார் என செய்தி பரவியது. ஆனால் அது உண்மையில்லை.
அவரை நடிக்கச் சொல்லிகேட்டு அணுகினோம் என்பது மட்டும் உண்மை. அவருக்கு வேறு படங்கள் இருந்ததால் தேதி தரமுடியாமல் போனது. இதை யாரோ திரித்து அவர் நடிப்பதாகச் சொல்லிவிட்டார்கள். மிக மிக முக்கியமான அந்த கேரக்டரில் ஒரு பிரபலமான நடிகை நடிக்க இருக்கிறார். அவர் யாரென்பது சஸ்பென்ஸ்.

அடர்ந்த காட்டுக்குள் ஒரு பழைய ஜாமீன் மாளிகையில் பிரம்மாணடமான புதையல் இருக்கிறது. அந்த புதையலை பயங்கரமான பேய் ஒன்று பாதுகாத்து வருகிறது. இது தெரியாமல் புதையலேடுக்கக் கிளம்பும் நகைச்சுவைப் பட்டாளம் பேயிடம் மாட்டி என்ன பாடுபட்டார்கள் என்பதை நகைச்சுவையுடனும் திரில்லுடனும் சொல்லியிருப்பதே கோப்பெருந்தேவியின் மையக்கதை.

படத்தை பிரம்மாண்டப்படுத்த இருபது நிமிடம் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது. தமிழ் சினிமாவில் இதற்கு முன் இத்தனை நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடித்திருப்பார்களா என்பது சந்தேகமே. பதினெட்டு நகைச்சுவை நடிகர்களுடன் கோப்பெருந்தேவி வயிறு குலுங்க சிரிக்க வைக்க உருவாகி வருகிறாள். இந்த படத்தில் ஊர்வசி, கோவை சரளா, தேவதர்ஷினி, வி.டி.வி கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமான், சாமிநாதன், வெண்ணிற ஆடை மூர்த்தி, டெல்லி கணேஷ், இளவரசு, வடிவுக்கரசி, பாண்டு, சாம்ஸ், அனுமோகன், வெங்கல்ராவ், பயில்வான் ரெங்கநாதன், அல்வா வாசு, பாலக்ருஷ்ணன் உட்பட பதினெட்டு நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ரமேஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய, எஸ். எம். பிரசாந்த் இசையமைத்துள்ளார். இவர் ஏ ஆர் ரகுமானின் இசைக்கல்லூரி மாணவர். ஐதராபாத், ராஜமுந்தரி,பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, விழுப்புரம் ஆகிய இடங்களில் படம் வளைந்து வருகிறது. விடுமுறை விருந்தாக பயப்படுத்தியும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தும் மகிழ்விக்க மே மாதம் திரைக்கதவுகளை தட்ட இருக்கிறது கோப்பெருந்தேவி.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top