புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் டாக்டர் ராம் ராமமூர்த்தி. இவர் இங்கிலாந்தில் உள்ள ஈடன்பர்க் பல்கலைக்கழகத்தில் கணிபொறி அறிவியல்
துறையில் பேராசிரியராக பணிபுரிகிறார்.

இவர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு புத்திசாலியான புதிய ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இந்த ரோபோ செயற்கை சிந்தனை திறன் கொண்டது. இது மனிதர்களுடன் ´ராக்-சிஸ்சர்-பேப்பர்´ என்ற விளையாட்டை விளையாடும்.

இரண்டு நபர்கள் கைகளை நீட்டி, பறை, கத்தரிகோல், காகிதம் என்ற மூன்று வடிவங்களை கைகளால் காண்பிக்க வேண்டும்.

ஒரே வடிவத்தை இரண்டு பேரும் காண்பித்தால் போட்டி முடிந்து விடும். இந்த விளையாட்டினை ரோபோ மனிதர்களுடன் தொடர்ந்து விளையாட முடியும். இரண்டு அடி உயரம் கொண்ட இந்த ரோபோ மனிதனின் சைகைகளை புரிந்து கொள்கிறது.

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஈடன்பர்க் சர்வதேச அறிவியல் திருவிழாவில் இந்த ரோபோ அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த ரோபோ 2013-ம் ஆண்டு நடைபெற உள்ள ரோபோ கால்பந்து போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top