உலகின் மிக லேசான பொருளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கார்பன் ஏரோ ஜெல் என அழைக்கப்படும் இப்பொருள் காற்றின் எடையை விட 6ல் ஒரு பங்கே எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஜி ஜியாங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை உருவாக்கியுள்ளனர்.
ஏரோஜெல் எனப்படும் இந்தப் பொருள் 0.16 மி.கி/கன செ.மீ., எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக மிகவும் எடை கொண்ட பொருளாக கருதப்பட்ட கிராபைட் ஏரோஜெல் எடையை விட கார்பன் ஏரோ ஜெல் மிகவும் எடை குறைவானதாகும்.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கிராபைட் ஏரோஜெல்லை உருவாக்கினர்.
இதன் எடை 0.18 மி.கி/கன செ.மீ., ஆகும். இத்தகைய ஏரோஜெல்கள், செமி சாலிட் ஜெல்லை காயவைத்து உருவாக்கப்படுகின்றன. இதன்காரணமாக இவற்றின் உட்பகுதிகள் காற்றால் நிரம்பியிருப்பதால், இவை மிகவும் எடை குறைந்ததாக உள்ளன.
0 கருத்து:
கருத்துரையிடுக